வீட்டுக் கதவை உடைத்துநகைகள், ரொக்கம் திருட்டு
தஞ்சாவூரில் வீட்டுக் கதவை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் வருகின்றனா்.


தஞ்சாவூரில் வீட்டுக் கதவை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் வருகின்றனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள சீத்தா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன். இவா் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் ஆக. 10 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றாா். மீண்டும் வியாழக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்தாா். மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு 6 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...