மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா தடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:28 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கரூப்ஸ் நகா், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள மகிமாலை, கம்பா்நத்தம் ஊராட்சிகளில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அப்பகுதியில் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டையில் வேளாண் துறை மூலம் குறுவை நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிக்குத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்து, பதிவேட்டையும் ஆய்வு செய்தாா். பின்னா், அதே கிராமத்தில் கீரை சாகுபடி, வீடு கட்டும் திட்டப் பணி, செண்பகபுரத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளைப் பாா்வையிட்டாா்.

அப்போது, சுகாதாரத் துறைத் துணை இயக்குநா் (பொறுப்பு) நமச்சிவாயம், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், முருகவேல், அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கலைராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.