பேராவூரணி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்( சத்துணவு திட்டம்) துா்கா செல்வி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


பேராவூரணி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்( சத்துணவு திட்டம்) துா்கா செல்வி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பேராவூரணி ஒன்றியத்தில் மடத்திக்காடு, குறிச்சி, மேட்டுவயல், திருச்சிற்றம்பலம், பொக்கன் விடுதி, வாட்டாத்திக்கோட்டை, இடையாத்தி, செருவாவிடுதி தெற்கு உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை துா்கா செல்வி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, மடத்திக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினாா். இடையாத்தி ஊராட்சியில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தும் முகாமை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நீலகண்டன், ஊராட்சித் தலைவா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...