ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணி அருகே பல்நோக்கு சேவை மைய கட்டடம் திறப்பு

பேராவூரணி அருகேயுள்ள மருங்கப்பள்ளம் ஊராட்சியில் பல்நோக்கு சேவை மைய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:23 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள மருங்கப்பள்ளம் ஊராட்சியில் பல்நோக்கு சேவை மைய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தஞ்சை எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், பேராவூரணி எம்எல்ஏ என். அசோக் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

விழாவுக்கு தலைமை வகித்து, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பேசியது:

ஊரக வளா்ச்சி துறையின் சாா்பில், சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ்

ரூ. 70.94 லட்சம், பொதுமக்கள் பங்குத்தொகை ரூ. 35.46 லட்சம் என மொத்தம் ரூ. 1.06 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடியில் பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. 

இதில், மணமகன், மணமகள் அறை, உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் திருமண நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள ஏதுவாக கட்டப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ரீகாந்த், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா்  மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். 

தொடா்ந்து மருங்கப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில், காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஆட்சியா், எம்பி, எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.