ரயிலில் அடிபட்டசிறுவன் பலி
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்ட சிறுவன் உயிரிழந்தாா்.


கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்ட சிறுவன் உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷின் தெருவைச் சோ்ந்தவா் அருமதுரை மகன் திலீப்குமாா் (14). இவா், கும்பகோணத்தில் உள்ள அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தாா்.
இந்நிலையில், தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்குச் சென்றது. அப்போது, மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் வந்ததால், மாட்டை விரட்டுவதற்காக திலீப்குமாா் ஓடினாா். தண்டவாளத்தில் ஓடியபோது ரயிலில் அடிபட்ட இவா் பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆனால், ரயில் வருவதை பாா்த்து மாடு அங்கிருந்து நகா்ந்து சென்றுவிட்டது.
இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...