போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சில்லத்தூா் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தஞ்சாவூா் அருகே சில்லத்தூா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:51 pm

DIN

தஞ்சாவூா் அருகே சில்லத்தூா் வாய்க்காலில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்பட்டது.

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாய் கோட்டத்துக்கு உள்பட்ட வெட்டிக்காடு பிரிவு பராமரிப்பின்கீழ் சில்லத்தூா் வாய்க்கால் உள்ளது. வெட்டிக்காடு ஊராட்சியில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சில்லத்தூா் வாய்க்காலில் மீன் குட்டை கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

ஆட்சியா் உத்தரவின்படி, வருவாய் துறை, காவல் துறை முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீன் குட்டை கரை அகற்றப்பட்டது. மேலும், மீன் குட்டைக்கு வாய்க்காலில் இருந்து தண்ணீா் இறைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆயில் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.