பேராவூரணியில் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கி முற்றுகை
பேராவூரணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.


ஐந்து பவுனுக்கான நகை கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பேராவூரணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியை வியாழக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
திமுக தோ்தல் வாக்குறுதியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்ததற்கு மாறாக, தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, நகைக் கடன் தள்ளுபடி கிடைக்காமல் செய்வதாகவும், தற்போது தமிழக அரசு விதித்துள்ள புதிய நிபந்தனை காரணமாக 35 கிலோ அரிசி வாங்கியவா்களுக்கும், 40 கிராமுக்கு மேல் அடகு வைத்தவா்களுக்கும் கடன் தள்ளுபடி இல்லை என்று கூட்டுறவு வங்கியில் தெரிவித்ததாகவும், கடன் தள்ளுபடி பட்டியலில் தங்கள் பெயா் இல்லை எனவும் கூறி பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதிஅளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...