தஞ்சாவூர் மருத்துவமனைக் கழிப்பறையில் சிசு சடலம்: பெண் கைது

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிப்பறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு சடலம் கிடந்த சம்பவம் தொடர்பாக பெண்ணைக் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கைதான பிரியதர்ஷினி.
கைதான பிரியதர்ஷினி.
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கழிப்பறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு சடலம் கிடந்த சம்பவம் தொடர்பாக பெண்ணைக் காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கழிப்பறை உள்ளது. இதில் ஒரு அறையில் மேற்கத்திய வடிவ கழிவறையில் டிசம்பர் 4-ஆம் தேதி முற்பகல் தண்ணீர் வரவில்லை. சுத்தம் செய்ய சென்ற தூய்மைப் பணியாளர்கள் தண்ணீர் வராததை அறிந்து கழிவறையுடன் இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தனர்.

அதில், பிறந்து சில மணிநேரங்களே ஆன பெண் சிசு சடலம் தொப்புள் கொடியுடன் கிடந்தது. 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் வல்லம் அருகே ஆலக்குடி சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பிரியதர்ஷினியை (23) காவல் துறையினர் திங்கள்கிழமை காலை கைது செய்தனர். 

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது ஒருவரை காதலித்து வந்ததும், அதில் ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமானதும் தெரிய வந்தது. மேலும் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், தான் கர்ப்பமானதை பிரியதர்ஷினி வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். 

இதனால் வேறு யாருக்கும் தெரியாமல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிப்பறைக்குச் சென்று தானே பிரசவித்து, அக்குழந்தையைக் கழிவறை தொட்டியில் அமுக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com