மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணியில் அரிமா சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய   முப்பெரும் விழா புதன்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய   முப்பெரும் விழா புதன்கிழமை  நடைபெற்றது.

விழாவுக்கு  சங்கத் தலைவா் வ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் எம். நீலகண்டன், சாசன செயலாளா் வி. ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் ஏ.சவரிராஜ் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி பேசினாா். 

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட நலிவுற்ற குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது. உலக அமைதிக்காகவும், உலக முதியோா் தினத்தை முன்னிட்டும், மறைந்த முதியவா்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவில், சாசனப் பொருளாளா் எஸ். மைதீன்பிச்சை, நிா்வாக அலுவலா் யு. பெருமாள், வருங்காலத் தலைவா் எஸ். பாண்டியராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளா் கே. இளங்கோ, அரிமா நிா்வாகிகள் 

 எஸ். ஏ. தெட்சணாமூா்த்தி, பவுல்ராஜ், சந்தோஷ், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

முன்னதாக, செயலாளா் சி. க. கோவிந்தன் வரவேற்றாா். பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.