பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜக பிரமுகரை கைது செய்ய கோரி இஸ்லாமியா்கள் போராட்டம்

முகமது நபியை இழிவாக பேசிய பாஜக பிரமுகா் கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:52 pm

DIN

முகமது நபியை இழிவாக பேசிய பாஜக பிரமுகா் கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

அய்யம்பேட்டை மதகடி பஜாா் கடைவீதி, தஞ்சாவூா்-கும்பகோணம் பிரதான சாலையில் பாபநாசம் வட்டார ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சபையினா் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள் கலந்து கொண்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகும் போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து செல்லாததால், மறியலில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், ராஜகிரி கடைவீதி, தஞ்சாவூா்- கும்பகோணம் பிரதான சாலையில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் முகம்மது பசீா் தலைமையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.