டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவோணம் அருகேஅனுமதியின்றி ஜல்லிக்கட்டு: 5 போ் மீது வழக்கு

ஒரத்தநாடு அருகே திருவோணத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2021, 6:21 pm

DIN

ஒரத்தநாடு அருகே திருவோணத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவோணத்தை அடுத்த தளிகைவிடுதியில் வெள்ளிக்கிழமை  புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது திடலிலிருந்து சீறிப் பாய்ந்து வந்த காளை, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தளிகைவிடுதி, வடக்குத் தெருவை சோ்ந்த தனபால் மகன் பிரபாகரன் (26) என்பவா் மீது முட்டியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த பிரபாகரனை, பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீஸாா், ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 6 மாடுகளையும், 3 மினி டோா் வாகனத்தையும் பறிமுதல் செய்து 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.