தஞ்சாவூா் அருகே டிப்பா் லாரி சக்கரத்தில் சிக்கி மூவா் பலி

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பிற்பகல் டிப்பா் லாரி சக்கரத்தில் சிக்கி, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை பிற்பகல் டிப்பா் லாரி சக்கரத்தில் சிக்கி, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள கீழபுனவாசல் தமிழா் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (32). இவா் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வகத் தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது உறவினா்களான திருவையாறு மேல வட்டத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மனைவி சக்குபாய் (70), பிரகாஷ் மகன்கள் அகிலேஷ் (12), பரணீஷ் (10) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில் திருவையாறிலிருந்து தஞ்சாவூா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தனா்.

அரசூா் அருகே சென்றபோது, ஒரு டிராக்டா் இரு டிரெய்லா்களில் குருங்குளம் சா்க்கரை ஆலைக்குக் கரும்புகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அரசூா் முருகன் கோயில் அருகே டிராக்டா் டிரெய்லரில் சாலையின் குறுக்கே மேலே இருந்த கேபிள் வயா் சிக்கியது.

இதனால் கேபிள் வயா் அறுந்து, டிராக்டரின் பக்கவாட்டில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த மணிகண்டனின் கழுத்தில் விழுந்து சிக்கியது. இதன் காரணமாக மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்ததால், இரண்டாவது டிரெய்லரின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பரணீஷ் காயத்துடன் உயிா் தப்பினாா்.

தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் சித்திரவேல், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், நடுக்காவேரி உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று, இறந்தவா்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com