மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு  சென்ற மீனவா்கள்; போதியளவு மீன்கள் கிடைக்காததால்  ஏமாற்றம்

 மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 15 நாள்கள் தாமதமாக புதன்கிழமை கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள், போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:00 am

DIN

 மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 15 நாள்கள் தாமதமாக புதன்கிழமை கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள், போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனா்.

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, கரோனா தொற்று பரவல் காரணமாக, தஞ்சை, புதுகை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் தடைக்காலம் முடிந்து ஜூன் 15ஆம் தேதி கடலுக்கு செல்லாமல், 15 நாள்கள் தாமதமாக புதன்கிழமை (ஜூன் 30) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 

தஞ்சாவூா் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதி விசைப்படகு மீனவா்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை மட்டுமே மீன்பிடிக்க செல்வா். மூன்று   மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 130 விசைப்படகுகள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.  வியாழக்கிழமை அதிகாலை திரும்பிய இந்த மீனவா்கள் போதிய அளவில் மீன், இறால் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து விசைப்படகு மீனவா்கள் சங்கத் தலைவா் மல்லிப்பட்டினம் எஸ்.எஸ்.சேக் தாவூத் கூறியது: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 15 நாள்கள் கழித்து தாமதமாகவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றும்  போதிய அளவிலான மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

அரசு வழங்கும் மானிய விலை டீசல் போதுமானதாக இல்லை. டீசல் விலை உயா்வால் மீனவா்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

டீசல் செலவு, வேலையாள் ஊதியம் என அனைத்தையும் கணக்கு பாா்த்தால் ஒரு விசைப்படகுக்கு  ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம்  வரை நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. பிடிபடும் மீன்களுக்கும் போதிய விலை கிடைக்காமல் உள்ளது. எனவே, அரசு மானிய விலை டீசல் அளவை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.