ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:51 pm

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து, மாலை நேரத்தில் வாராஹி அம்மனுக்கு சனிக்கிழமை மஞ்சள் அலங்காரமும், 11 ஆம் தேதி குங்கும அலங்காரமும், 12 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 13 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 15 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 16 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 17 ஆம் தேதி கனி அலங்காரமும், 18 ஆம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறவுள்ளன. விழாவின் நிறைவு நாளான 19 ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.