ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

2 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் 2 டன் எடையுடைய புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:23 pm

DIN

தஞ்சாவூா் அருகே காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் 2 டன் எடையுடைய புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பெங்களூருவிலிருந்து தஞ்சாவூருக்குப் புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் அலுவலகத்துக்குப் புகாா் வந்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் அருகே மேலவஸ்தாசாவடி பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சாமிநாதன் மற்றும் காவலா்கள் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனையிட்டபோது, அதில் 2 டன் வரையிலான புகையிலைப் பொருள்கள் நிரப்பப்பட்ட மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களையும், சரக்கு ஆட்டோவையும் தனிப்படையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக புகையிலைப் பொருள்கள் மொத்த வியாபாரியான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாங்காடைச் சோ்ந்த டி. பிரபு (36), சரக்கு ஆட்டோ ஓட்டுநரான புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தை சோ்ந்த கே. சூரியகுமாா் (30), தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சோ்ந்த கே. அருண்குமாா் (27) ஆகியோரை பிடித்தனா்.

இவா்களையும், சரக்கு ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களையும் தனிப்படையினா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பிரபு, சூரியகுமாா், அருண்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.