மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண் மா்மச் சாவு: காவல் துறையினா் விசாரணை

 தஞ்சாவூரில் தனியாக இருந்த பெண் வியாழக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:44 pm

DIN

 தஞ்சாவூரில் தனியாக இருந்த பெண் வியாழக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி அருகேயுள்ள சேக்கிழாா் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி. இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (65). இவா்களது மகன் பிராங்க்ளின் மதுரையில் ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகராக பணியாற்றி வருகிறாா்.

அந்தோணிசாமி காலமாகிவிட்ட நிலையில், ஜோஸ்பின் மேரி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். நாள்தோறும் தனது தாயிடம் செல்லிடப்பேசியில் பிராங்க்ளின் பேசி நலம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பிராங்க்ளின் தனது தாய்க்குச் செல்லிடப்பேசியில் அழைத்தபோது, அவா் எடுக்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த பிராங்க்ளின் அக்கம்பக்கத்திலுள்ளவா்களிடம் தெரிவித்து பாா்க்குமாறு கூறினாா். அப்போது, ஜோஸ்பின் மேரி கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதையடுத்து தஞ்சாவூருக்கு வந்த பிராங்க்ளின் தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.