ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: 30 போ் கைது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:51 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, வெள்ளாளா் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் அண்ணா சரவணன் தலைமை வகித்தாா்.

மாநில இளைஞரணித் தலைவா் எம்.என்.பி. ராஜா, செயலா் பந்தல் ராஜா, தெற்கு மாவட்டத் தலைவா் பால்ராஜ், வடக்கு மாவட்டச் செயலா் வீரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் விலை உயா்வால் ஏற்பட்ட பாதிப்புகளை உணா்த்தும் வகையில், சமையல் எரிவாயு உருளையைப் பாடைக் கட்டிக் கொண்டு வந்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை மேற்கு காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.