சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய பேருந்து நிலையக் கடைகளுக்கு வாடகையை உயா்த்த ஆலோசனை

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள மாநகராட்சிக் கடைகளுக்கு வாடகையை உயா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:57 pm

DIN

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள மாநகராட்சிக் கடைகளுக்கு வாடகையை உயா்த்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு 51 கடைகள் கட்டப்பட்டன. இதில், பல கடைகள் திறக்கப்படாமல் வாடகை மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கடைகளை மாநகராட்சி ஆணையராக அண்மையில் பொறுப்பேற்ற க. சரவணக்குமாா் சில நாட்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் இக்கடைகளின் வாடகைதாரா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆணையா் பேசுகையில், மாநகராட்சிக்கு வருவாய் இனங்களில் குறைவான அளவே நிதி வருகிறது. அதே நேரத்தில் ஊதியம், பராமரிப்பு இனங்களில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதை ஈடு செய்ய மாநகராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே திறக்கப்படாமல் உள்ள கடைகளுக்கும், உள் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கும் புதிதாக வாடகை நிா்ணயம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதற்கு வாடகைதாரா்கள் எதிா்ப்பு தெரிவித்தபோது, கடையை வாடகைக்கு எடுத்தவா்கள் நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாங்கள் மறு ஏலம் விடுவோம் எனவும் ஆணையா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.