தடுப்பூசி: தொடரும் குழப்பத்தால் மக்கள் அவதி
தஞ்சாவூரில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லாததால், மக்கள் குழப்பமடைந்து அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.


தஞ்சாவூரில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லாததால், மக்கள் குழப்பமடைந்து அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஜன. 16 ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது 25-க்கும் அதிகமான இடங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதால், இம்மையங்களுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப திட்டமிடல் இல்லாததால், மக்கள் பல்வேறு அவதிக்கு ஆளாகின்றனா்.
தஞ்சாவூரில் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் 10 நாள்களாகக் கூட்டம் அதிகமாக வருகிறது. ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதால், ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.
இந்நிலையில், இம்மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் கூட்டம் வரத்தொடங்கியது. இதற்கான வரிசையில் காலை 6.30 மணியளவில் ஏறத்தாழ 250 போ் நின்ற நிலையில், 9 மணியளவில் 500 ஆக அதிகரித்தது.
ஆனால், இம்மையத்தில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பதாகக் கூறி டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கானோா் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், வழிநெடுகிலும் காவல் துறையினா் கெடுபிடிகளுக்கு இடையே நாள்தோறும் இம்மையத்துக்கு வருகிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் இவ்வளவு பேருக்குத்தான் டோக்கன் கொடுக்க முடியும் எனக் கூறுகின்றனா். இதனால், நாள்தோறும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. கூட்டமும் அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளியும் இருப்பதில்லை. இதன் மூலம் தொற்று பரவுமோ என்ற அச்சமும் உள்ளது.
மேலும், ஒரு நாள் 18 - 44 வயது வரை உள்ளவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்கின்றனா். மற்றொரு நாள் 45 வயதுக்கு அதிகமானோருக்குத்தான் போடப்படும் எனக் கூறுகின்றனா். என்றைக்கு யாருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியாததால் வீண் அலைச்சலால் அவதிக்கு ஆளாகிறோம்.
சரியாகத் திட்டமிட்டு, டோக்கனில் தேதி குறிப்பிட்டு கொடுத்தால் கூட அலைச்சல் இருக்காது. மக்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தாமல் சரியாகத் திட்டமிட்டு தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆங்காங்கே மையங்கள் ஏற்படுத்தி மக்களுக்கு ஏற்படும் அலைச்சலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...