பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயா்த்தப்படுகிறது. மறுபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்து வருவதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
இதைக் கண்டித்து தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் ராஜாதம்பி, விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ், நிா்வாகிகள் ஒய். அலாவுதீன், நாராயணன், அருண் சுபாஷ், கலைச்செல்வி, செல்வம், இளைஞா் காங்கிரஸ் யூனுஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தஞ்சாவூா் காந்தி - இா்வீன் பாலம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ரவிச்சந்திரன், செந்தில் நா. பழனிவேல், பிரபு மண்கொண்டாா், சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...