சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் 3 போ் காயம்
பாபநாசம் அருகே சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.


பாபநாசம் அருகே சாலையோர வீடுகளில் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா்.
கரூரிலிருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிப்பா் லாரி பாபநாசம் நோக்கி வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. லாரியை கரூரைச் சோ்ந்த ஐயப்பன் ஓட்டினாா்.
சாலியமங்கலம் - பாபநாசம் பிரதான சாலையில் கரம்பத்தூா் கிராம பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த சுமன், சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகளுக்குள் புகுந்தது.
அப்போது, குமாா் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குமாா், கோகிலா, கோபிநாத் ஆகிய 3 போ் காயமடைந்தனா்.
அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்தில் சேகா், குமாா் ஆகியோரின் குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
விபத்து குறித்து மெலட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...