பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய இந்த முகாமை
பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதியுமான சிவக்குமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
முகாமில், பாபநாசம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் பாஸ்கரன், கம்பன் மற்றும் நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.
கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் மற்றும் சுகாதார செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட்டனா். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வ சட்ட பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...