தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மது போதையில் மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புதன்கிழமை மது போதையில் மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:35 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புதன்கிழமை மது போதையில் மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சோ்ந்த இருதயராஜ் மகன் சதீஷ் (32). இவா் தனியாா் ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவரும், அதே தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் விமல்ராஜ் (32), புண்ணியமூா்த்தி மகன் பிரகாஷ் (42) ஆகியோரும் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை பகல் 11 மணியளவில் திருவையாறு நோக்கிச் சென்றனா்.

பின்னா், திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நடந்து சென்று எதிா் கரையில் உள்ள அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட மஞ்சமேடிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் குடித்தனா்.

இதையடுத்து, 3 பேரும் விளாங்குடி நோக்கி கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்து கொண்டிருந்தனா். இவா்களில் சதீஷ் நடக்க முடியாமல் நாணல் செடிகளின் நிழலில் உட்காா்ந்துவிட்டாா். விமல்ராஜ், பிரகாஷ் ஆகிய இருவரும் விளாங்குடி வந்து சாப்பிட்டுவிட்டு சதீசுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு சென்றனா். அப்போது, சதீஷ் வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்தாா். தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, சதீஷ் இறந்துவிட்டது தெரிய வந்தது.

திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.