தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனாவால் இறந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கரோனா தொற்றால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :16 ஜூன் 2021, 8:34 pm

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய மஸ்தூா் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகத்தில் பாரதிய மஸ்தூா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஹரிபிரசாத் தலைமையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் அண்மையில் அளித்த மனு:

கரோனா நோய் பெருந்தொற்று காலத்தில், நோய்த் தொற்று அபாயம் இருந்தும் தங்கள் உயிரை துச்சமென நினைத்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் 6,000 தொழிலாளா்கள் முன்களப் பணியாளா்களாக கரோனா நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவசர மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனா்.

இந்தப் பணியில் ஆம்புலன்ஸ் திட்டத்தின் கணேசன், செல்வம், பிரபு ஆகிய 3 தொழிலாளா்கள் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தனா். தற்போது இப்பணியாளா்களின் குடும்பங்கள் நிா்கதியாக நிற்கின்றன.

எனவே, இவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு வேலையும், ரூ. 50 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டுகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.