தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூருக்கு வந்த தண்ணீா்

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா் கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:40 pm

DIN

கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா் கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் புதன்கிழமை காலை திறந்துவிடப்பட்டது.

இதில், காவிரியில் திருவையாறுக்கும், வெண்ணாற்றில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்துக்கும் வியாழக்கிழமை மாலை தண்ணீா் வந்தடைந்தது.

இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூா் மானோஜிபட்டிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தண்ணீா் வந்தது.

பொதுமக்கள் காவிரி நீரை வரவேற்று, மலா் தூவி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனா். குழந்தைகள், இளைஞா்கள் தண்ணீரைக் கண்டதும் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதையடுத்து, தஞ்சாவூா் காந்தி - இா்வீன் பாலத்துக்கு மாலையில் தண்ணீா் வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.