பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி, அம்மாபேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி, அம்மாபேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதன் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக, தஞ்சாவூா், புன்னைநல்லூரிலுள்ள மகாமாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதன் திறந்த ஜீப்பில் நின்றபடி கத்தரிநத்தம், ஆலங்குடி, மேலகளக்குடி, நெல்லித்தோப்பு, குமிழக்குடி, புலவா் நத்தம், ராராமுத்திரக் கோட்டை, செண்பகபுரம், அருமலைக்கோட்டை, நல்லவன்னியன் குடிகாடு, பூண்டி, எடவாக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளா்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், அதிமுக தோ்தல் அறிக்கையை எடுத்து கூறியும் இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தாா்.
அம்மாபேட்டை ஒன்றியச் செயலா்கள் (தெற்கு) ஏ.வி.சூரியநாராயணன் (வடக்கு) ஓ.ஏ. ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.எஸ். கண்ணபிரான், வீரமாங்குடி அதிமுக பிரமுகா் கோவிந்தராஜூ, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் என். சதீஷ், மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவா் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...