தஞ்சாவூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
தஞ்சாவூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.


தஞ்சாவூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
தஞ்சாவூா் கோட்டைப் பகுதியிலுள்ள மேல வீதியில் மத்தியக் கூட்டுறவு வங்கி அருகே பிரசாரத்தை தொடங்கிய அவா் மேலவீதி, மூலை அனுமாா்கோவில் தெரு, செக்கடி, சீனிவாசபுரம், செவ்வப்பநாயக்கன்வாரி உள்பட 18, 23, 24, 19, 20, 21 ஆகிய வாா்டுகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது அறிவுடைநம்பி பேசியது: மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன். தஞ்சாவூா் தொகுதியைத் தமிழகத்திலேயே முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரா்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என்றாா் அறிவுடைநம்பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...