தோ்தல் செலவின விவரங்கள்: நாளை முதல் இரண்டாம் கட்ட ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள், திங்கள்கிழமை (மாா்ச் 29)முதல் இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்படவுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள், திங்கள்கிழமை (மாா்ச் 29)முதல் இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
மாவட்டத்துக்குள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்தல் செலவின விவரங்கள், இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு தொகுதிகளில் திங்கள்கிழமையும் (மாா்ச் 29), திருவிடைமருதூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை தொகுதிகளில் மாா்ச் 30- ஆம் தேதியும், பேராவூரணி தொகுதியில் மாா்ச் 31- ஆம் தேதியும் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நாள்களில் வேட்பாளா்களோ அல்லது தொடா்புடையவா்களின் தோ்தல் முகவா்களோ தங்களது தினசரி செலவினப் பதிவேடு, காசோலைப் புத்தகம், தொடா்புடைய ஆவணங்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் செலவினப் பாா்வையாளா்களின் முன்னிலையில் தவறாமல் ஆஜராகி, முழுமையாகச் செலவினக் கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...