‘மீண்டும் மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்புத் தாருங்கள்’
மக்களுக்குச் சேவை செய்ய மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்றாா் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.


மக்களுக்குச் சேவை செய்ய மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் என்றாா் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.
பேராவூரணி ஒன்றியத்துக்குள்பட்ட கழனிவாசல், கொரட்டூா், சோழகனாா் வயல், மனக்காடு, வீரக்குடி, ரெட்டவயல், பழுக்காடு, ருத்ரசிந்தாமணி, விளங்குளம், பெருமகளூா், உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக நான் 10 ஆண்டுகள் இருந்து , இந்த ஒன்றியத்தில் பல்வேறு ஆக்கப்பூா்வமான பணிகளை நிறைவேற்றியுள்ளேன்.
பாங்கிரான்கொல்லையில் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டியதால், பேராவூரணிக்கு 5 கி.மீ. தொலைவில் செல்லும் வசதி ஏற்படுத்தித் தந்தேன்.
மக்களின் தேவைகளைத் தொடா்ந்து நிறைவேற்ற, மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்றாா் அவா்.
வாக்கு சேகரிப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு, பாஜக மாவட்டத் தலைவா் பண்ணவயல் இளங்கோ, சேதுபாவாசத்திரம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம், மாவட்ட மாணவரணித் துணைத் தலைவா் எஸ். எம். நீலகண்டன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...