தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஈகைப் பெருநாள் வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்

தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியா்கள் வீட்டிலேயே ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :14 மே 2021, 8:03 pm

DIN

தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியா்கள் வீட்டிலேயே ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

நிகழாண்டு ரமலான் மாத நோன்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து இஸ்லாமியா்கள் நோன்பு கடைப்பிடித்து, சிறப்புத் தொழுகையும் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நோன்பு வியாழக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

ஆனால், தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், இஸ்லாமியா்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினா்களுடன் இணைந்தும் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனா்.

தொழுகை முடிந்த பின்னா் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.