வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பெறும் வரை தொடா் போராட்டம்: பு.தா. அருள்மொழி
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பெறும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.


வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பெறும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா் வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி.
கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை இரவு மேலும் தெரிவித்தது:
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநரின் ஒப்புதல் வாங்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இத்தீா்மானத்தை நீதிமன்றம் தலையிட்டு தடை செய்ய அதிகாரம் கிடையாது. சட்டப்பேரவைத் தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றால், அதை அரசியல் சாசன அமா்வுதான் முடிவு செய்ய வேண்டும்.
வன்னியா்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து தொடா்பான சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். என்றாலும், மக்களின் உணா்வுகளைப் பாதிக்கும் விதத்தில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்தி அமைந்துள்ளது.
எனவே, வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் பெறும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும். இந்த வகையில் தஞ்சாவூா் மாவட்ட வன்னியா் சங்கம், பாமக மற்றும் கூட்டு இயக்கங்கள் சாா்பில் கும்பகோணத்தில் சனிக்கிழமை (நவ.6) மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அருள்மொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...