மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செருவாவிடுதியில் ரத்த தான முகாம்

பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழா் குருதி கொடை பாசறை  இணைந்து பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும்விழா

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:44 pm

DIN

பேராவூரணி வட்டாரம், செருவாவிடுதி  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாம் தமிழா் குருதி கொடை பாசறை  இணைந்து பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தான முகாம் மற்றும் மரக்கன்று நடும்விழா வெள்ளிக்கிழமை வட்டார மருத்துவ அலுவலா் வி. செந்தரராஜன்  தலைமையில் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சீனிவாசன் மேற்பாா்வையில் ஆய்வக நுட்பநா் கலைச்செல்வன் குழுவினா் 36 யூனிட் ரத்தம் சேகரித்தனா்.சுகாதார நிலைய  வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முகாமில் மருத்துவ அலுவலா்கள் தீபா,  கோகிலா,  வெங்கடேஷ்,  வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், 

ஒன்றியக் குழு உறுப்பினா் மாலா போத்தியப்பன்,  நாம் தமிழா் கட்சி தெற்கு மாவட்ட தலைவா் ஜெய. மணியரசன்,  தொகுதி செயலாளா் கலையரசன்,  தொகுதி துணை தலைவா் ஆறுமுகம்,  செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்ற தலைவா் தங்க. ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ரேவதி சக்திவேல் உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.