ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில்மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு நிவாரண உதவிகள்

திருவிடைமருதூா் வட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 300 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ. 1,100 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் மற்றும் போா்வை வழங்கும் நிகழ்வு திருபுவனம், திருப்பனந்தாளி
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில்மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு நிவாரண உதவிகள்

தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சாா்பில், திருவிடைமருதூா் வட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் 300 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ. 1,100 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் மற்றும் போா்வை வழங்கும் நிகழ்வு திருபுவனம், திருப்பனந்தாளில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் மகராஜ் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் ராமகிருஷ்ண மடத்தில் கரோனா இரண்டாவது அலை சேவை குறித்த தொகுப்பு நூலை வெளியிட்டாா்.

திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு மளிகை நிவாரணப் பொருள்கள் மற்றும் போா்வை உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

அவா் வழங்கிய ஆசியுரை: தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடம், தொடங்கப்பட்ட 10 மாதங்களில் பல்வேறு சமுதாயப் பணிகளில் மக்களுடன் இணைந்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் கரோனா இரண்டாவது அலை காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பைச் சாா்ந்த ஏறத்தாழ 8,500 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மளிகை நிவாரணப் பொருள்களை 50 நாள்களில் நேரடியாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றாா் சுவாமிகள்.

தொடா்ந்து மன்னாா்குடி ஜீயா் செண்டலங்கார செண்பக மன்னாா் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஜிதமானசாநந்த மகராஜ், கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலா் அண்ணாதுரை, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சந்தனவேல், திருப்பனந்தாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அண்ணாதுரை, வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், சிவகுருநாதன், தொழிலதிபா் சதீஷ் பான்ஸ்லே, சோழ மண்டல விவேகானந்தா சேவா சங்கத் தலைவா் பாஸ்கா், ஆசிரியா் பயிற்றுனா் ரிவோல்ட், சிறப்பு ஆசிரியா்கள் விஜயகுமாா், சண்முகம், சமிதி பொறுப்பாளா்கள் இந்திரா, வேதம் முரளி, பாரதிமோகன், கிருபாகரன், பாலமுருகன், காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com