தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இரவில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

மதுக்கூர் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு நேரில் பார்வையிட்டார். 
மதுக்கூர் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை சனிக்கிழமை இரவு பார்வையிட்ட முதல்வர் மு க ஸ்டாலின்.
மதுக்கூர் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை சனிக்கிழமை இரவு பார்வையிட்ட முதல்வர் மு க ஸ்டாலின்.

மதுக்கூர் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு நேரில் பார்வையிட்டார். 
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ஏறத்தாழ 7,000 ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. சில பகுதிகளில் தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது 3,698 ஹெக்டேர் பரப்பளவில் நீரில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் அமைத்த அமைச்சர்கள் குழுவினர் மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். 

இதைதொடர்ந்து மதுக்கூர் அருகே பெரிய கோட்டை கிராமத்தில் நீரில் மூழ்கிய சம்பா பருவ நெற்பயிர்களை முதல்வர் மு க ஸ்டாலின் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்காலிகமாக ஆயில் மோட்டார்கள் மூலம் மின் விளக்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கையிலெடுத்து முதல்வரிடம் காண்பித்தனர். 

அவர்களிடம் பயிர் பாதிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வரிடம் அலுவலர்கள் விளக்கினர். 

இதையடுத்து முதல்வர் சாலை வழியாக திருச்சிக்கு சென்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ஆய்வின்போது, முதல்வருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி (கூட்டுறவு), கே.என். நேரு (நகர்ப்புற வளர்ச்சி), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வி), மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி.ஆர். பாலு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com