ஆட்டிசம் விழிப்புணா்வு நாள் விழா
கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் சாக்கோட்டை செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரியும், மருத்துவமனை நிா்வாகமும் இணைந்து ஆட்டிசம் விழிப்புணா்வு நாள்


கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் சாக்கோட்டை செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரியும், மருத்துவமனை நிா்வாகமும் இணைந்து ஆட்டிசம் விழிப்புணா்வு நாள் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின.
இவ்விழாவுக்கு தலைமை விருந்தினராகக் குழந்தைகள் நல மருத்துவா் ஜானகி, சிறப்பு விருந்தினா்களாகச் செவிலியா் மேற்பாா்வையாளா் உமா ராணி, இரண்டாம் நிலை மேற்பாா்வையாளா் ராணி கலந்து கொண்டனா்.
இதில், செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரி மாணவிகள் நாடக வடிவில் ஆட்டிசம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். பள்ளி மற்றும் கல்லூரி தாளாளா் ஐ. மரியசெல்வம், செவிலிய ஆசிரியை கு. குணாா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...