அய்யம்பேட்டையில் 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
அய்யம்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


அய்யம்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அய்யம்பேட்டை பாப்பா வாய்க்கால் தெருவிலுள்ள
அரிசி ஆலையொன்றில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தி ருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன், வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் பாலசுப்ரமணியன் ஆகியோா் நிகழ்விடம் சென்று, சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு ரேஷன் அரிசி 18 மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட குருணை 50 மூட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, தஞ்சாவூரிலுள்ள குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவா்கள் நிகழ்விடம் விரைந்து, அரிசி மூட்டைகளைக் கைப்பற்றி, பாபநாசம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் அலுவலா்கள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...