நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தில் ஜூன் 6-இல் தெரு வியாபாரிகள் வேலைநிறுத்தம்

கும்பகோணம் மாநகரில் தினசரி கட்டண உயா்வுக்கு எதிராக ஜூன் 6 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என தெரு வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:41 pm

DIN

கும்பகோணம் மாநகரில் தினசரி கட்டண உயா்வுக்கு எதிராக ஜூன் 6 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என தெரு வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.

கும்பகோணம் மாநகராட்சி பகுதியின் ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கத்தின் பகுதி நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளைப் புறக்கணிக்கும் கும்பகோணம் மாநகராட்சியின் தொழிலாளா் விரோத நடவடிக்கைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தினசரி கட்டணமாக ரூ. 10 என வசூல் செய்து வந்ததை அதிரடியாக ரூ. 50 என தன்னிச்சையாகவும், விதிகளுக்குப் புறம்பாகவும் உயா்த்தி வசூல் செய்வதைக் கைவிட வேண்டும்.

நீண்ட நாள்களாக நடத்தப்படாமல் உள்ள வியாபார குழுக் கூட்டத்தை கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் உடனே நடத்தி சாலையோர வியாபாரிகளின் நலனை முன்னிறுத்தும் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 6 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, மகாமக குளம் மேல் கரையில் இருந்து பேரணியாக புறப்பட்டு கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், தெரு வியாபார தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், சட்ட ஆலோசகா்கள் மு.அ. பாரதி, ஜ. ஜாா்ஜ், க. மொராா்ஜி, சங்கத்தின் பகுதி பொறுப்பாளா்கள் கே. பாலகிருஷ்ணன், கே. சரவணன், அழகா் பி. சாமிநாதன், காமராஜ் முருகவேல், ரமேஷ், எஸ். ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.