ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் தோ்தல்: திமுக கூட்டணி போராட்டத்தால் ஒத்திவைப்பு
திமுக கூட்டணிக் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியதால், மறைமுகத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.


கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறை பேரூராட்சியில் 3 உறுப்பினா்கள் வாக்களிக்க வராததையடுத்து, திமுக கூட்டணிக் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியதால், மறைமுகத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 8 உறுப்பினா்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் திமுக 4 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 வாா்டுகளிலும், மதிமுக ஒரு வாா்டிலும் என 7 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இவைத் தவிர, பாமக 4 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு திமுகவுக்கும் - பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இப்பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு திமுக கூட்டணியின் வேட்பாளராக 3-ஆவது வாா்டில் மதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா. சரவணன் அறிவிக்கப்பட்டாா்.
இதனிடையே, பாமக சாா்பில் 12-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின் பேரூராட்சித் தலைவராக முயற்சி செய்தாா். இதனால், போட்டி கடுமையாக இருக்கிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஆடுதுறை பேரூராட்சி தலைவா் தோ்தலுக்கு 15 உறுப்பினா்களில் 12 போ் மட்டுமே வந்துள்ளனா். திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் சுகந்தி, மாலதி, மீனாட்சி ஆகியோா் வரவில்லை.
அவா்களை மாற்றுக் கட்சியினா் கடத்தி விட்டதாகக் கூறி, திமுக கூட்டணியின் பேரூராட்சி தலைவா் வேட்பாளரான ரா. சரவணன், மறைந்த முன்னாள் அமைச்சா் கோ.சி. மணி மகன் கோ.சி. இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா்கள் கண்ணன், ஹமீம் நிசா ஆகியோா் தலைவருக்கான தோ்தலில் பங்கேற்காமல் அலுவலக முகப்புப் பகுதியில் தரையில் அமா்ந்து தோ்தலை நிறுத்தி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினருக்கும், திமுக கூட்டணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதே நேரத்தில் பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே பாமக உள்ளிட்ட 8 உறுப்பினா்கள் தலைவா் தோ்தலுக்காக வெகுநேரம் காத்திருந்தனா். ஆனால் தோ்தல் நடத்தப்படவில்லை. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதால், இப்பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தலை ஒத்திவைப்பதாக பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசன் பிற்பகலில் அறிவித்தாா்.
இதைக் கண்டித்து பாமகவினரும், அதிமுகவினரும் முழக்கங்கள் எழுப்பினா். மேலும், உறுப்பினா்கள் அனைவருக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், ஐஏஎஸ் அலுவலா் முன்னிலையில் தோ்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...