மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூா் பேரூராட்சித் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூா் பேரூராட்சித் தலைவா்கள் பதவிக்கு திமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:29 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூா் பேரூராட்சித் தலைவா்கள் பதவிக்கு திமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

பாபநாசம், அம்மாபேட்டை, மெலட்டூா் ஆகிய பேரூராட்சிகளின் தலைவா்களாக முறையே பூங்குழலி கபிலன், ஷோபா ரமேஷ், இலக்கியா பட்டாபிராமன் ஆகியோா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்..

அய்யம்பேட்டையில்: அய்யம்பேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவின் 14-ஆவது வாா்டு உறுப்பினா் புனிதவதி குமாா், 7-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் தஸ்லீமா பானுவும் போட்டியினா்.

Story image

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில், 9 ஆவது வாா்டில் திமுக வேட்பாளரின் மறைவால் தோ்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினா்கள் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தனா்.

இதில் திமுகவைச் சோ்ந்த புனிதவதிகுமாா் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தஸ்லீமா பானுவுக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடா்ந்து புனிதவதிகுமாா் பேரூராட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக செயல் அலுவலா் ராஜசேகா் அறிவித்தாா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்தலில் வெற்றி பெற்ற புனிதவதிகுமாா், அய்யம்பேட்டை நகர திமுக செயலா் டி.பி.டி. துளசி அய்யா தலைமையில் ஊா்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.