தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்க

News image
Updated On :17 மார்ச் 2022, 8:01 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்டத்தில் இதுவரை 33 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மறமடக்கி, புனல்குளம், ராசநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் இருந்து இந்த மூன்று ஆம்புலன்ஸ்களும் இயக்கும். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளா் ரஞ்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.