திருக்காட்டுப்பள்ளி அருகே ஆற்றில் சரக்கு லாரி விழுந்து விபத்து
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சனிக்கிழமை (மார்ச்.19) இரவு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் ஏற்றி வந்த சரக்கு லாரி விண்ணமங்கலம் வெண்ணாற்றில் தலை கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.


திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே சனிக்கிழமை (மார்ச்.19) இரவு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் ஏற்றி வந்த சரக்கு லாரி விண்ணமங்கலம் வெண்ணாற்றில் தலை கீழாக விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மொய்தீன்கான் (50) , திருச்சி பெரியார் நகர் பகுதியைச் சார்ந்த நாகப்பன் மகன் சக்திவேல் (21), காஜாமைதீன் மகன் நியாசர் ரகமத்துல்லா (34), ஜெயசீலன் மகன் அசோக் (34), மனோகர் மகன் கருப்புசாமி (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ம. நடராசன் நினைவு நாள்: தஞ்சாவூரில் சசிகலா அஞ்சலி
இவர்களுடன் வந்த திருச்சி பெரியார் நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (35) என்பவர் இதுவரை மீட்கப்படாததால் அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
சம்பவ இடத்தில் பூதலூர் காவல் துறையும், தீயணைப்புப் படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு லாரியை மீட்கும் பொருட்டும், கார்த்தியைத் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...