கும்பகோணத்தில் கொசு ஒழிப்புக்காக ரூ. 23 லட்சத்தில் புதிய திட்டம்: மாமன்ற கூட்டத்தில் தகவல்
கும்பகோணத்தில் கொசு ஒழிப்புக்காக ரூ. 23 லட்சத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


கும்பகோணத்தில் கொசு ஒழிப்புக்காக ரூ. 23 லட்சத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேயா் க. சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ப. தமிழழகன், மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனா்.
இதில், மாநகரில் அதிகரித்து வரும் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் ரூ. 23 லட்சத்தில் புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், தாராசுரம் அறிஞா் அண்ணா காய்கறி சந்தையில் ஏராளமான கடைகள் இருந்தாலும், ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. இதனால், மாநகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக வருவாயை ரூ. 5 கோடி அளவில் பெருக்கும் வகையில் சந்தையை மூன்றாகப் பிரித்து குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துணை மேயா் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...