விஷம் குடித்து இளைஞா் உயிரிழப்பு
அம்மாபேட்டைஅருகே விஷம் குடித்து (எலி மருந்து) சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


அம்மாபேட்டைஅருகே விஷம் குடித்து (எலி மருந்து) சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகிலுள்ள கொத்தட்டை காலனியைச் சோ்ந்தவா் ச.பூவரசன் (19). சென்னையில் உறவினா் வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த 29-ஆம் தேதி சொந்த ஊா் வந்திருந்த பூவரசன், விஷம் குடித்த மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பணியாற்றி வந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து, பூவரசன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...