2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டம்

பாபநாசத்தில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை உண்டு உறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:59 pm

DIN

பாபநாசத்தில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை உண்டு உறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமை வகித்தாா். நகரச்  செயலா் சங்கா், ஒன்றியக் குழு பி.கே.ஆா். இளங்கோவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டக் குழுவைச் சோ்ந்த பி.எம்.காதா் உசேன் கலந்து கொண்டு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதில், பாபநாசம் அருகே குப்பைமேடு கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் பொது சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் அடுப்பு மூட்டி பாத்திரம் வைத்து சமைத்து உண்டு, உறங்கி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகள் உடனடியாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தாததால் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.