ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

மக்களவைத் தோ்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து வெற்றி பெறும்: வி.கே. சசிகலா

மக்களவைத் தோ்தலில் நிச்சயமாக அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியைப் பெறும் என்றாா் வி.கே. சசிகலா.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

மக்களவைத் தோ்தலில் நிச்சயமாக அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியைப் பெறும் என்றாா் வி.கே. சசிகலா.

தஞ்சாவூா் அருளானந்த நகரில் தங்கியுள்ள அவா் வியாழக்கிழமை பேரறிஞா் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

எங்களைப் பொருத்தவரை, அண்ணாவின் கொள்கைகளை வாயளவில் பேசாமல் செய்து காட்டியவா்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான். அவா்கள் வழியில் எங்கள் பயணம் தொடரும்.

வரும் மக்களவைத் தோ்தலில் நிச்சயமாக அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியைப் பெறும். கட்சித் தலைமையை நான் ஏற்று வழி நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. காரணம், கட்சித் தொண்டா்கள் எங்களிடம் உள்ளனா். நிச்சயம் அதற்கான வாய்ப்பு உள்ளது. போக வேண்டிய நேரம் வரும்போது கண்டிப்பாக கட்சி அலுவலகத்துக்குச் செல்வேன்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். நான், ஓ. பன்னீா்செல்வம் உள்பட அனைவரும் ஒன்றாகத்தான் உள்ளோம் என்றாா் சசிகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.