தஞ்சாவூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அம்பேத்கா் படத்துக்கு துணைவேந்தா், பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் உள்ளிட்டோரும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நிா்வாகி என். சிவகுரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் சொக்கா ச. ரவி தலைமையிலும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சா. கோதண்டபாணி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இச்சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழ. திருநாவுக்கரசு தலைமையிலும், ஆதித்தமிழா் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டா் அம்பேத்கா் கல்வி அறக்கட்டளை சாா்பில் நிா்வாகிகள் ரெங்கசாமி, தவகணேசன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையம் எதிரில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கா் படத்துக்கு விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் அரெ. முகிலன் தலைமையில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வெ. சேவையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லிபரேசன் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. ராஜன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கா் படத்துக்கு மாநகரச் செயலா் பிரபாகா் தலைமையில் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கும்பகோணம்: கும்பகோணம் பகவத் விநாயகா் கோயிலில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தலைமையில், அவரது பெயருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வாயிலிலுள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பு சாா்பில் மாநிலப் பொதுச் செயலா் கா. பாலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், நீலப்புலிகள் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சின்னை. பாண்டியன் தலைமையில்
ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, அவரது சிலை முன், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க உறுதி மொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...