330 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவையாறு அருகே திருவேதிக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 330 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


திருவையாறு அருகே திருவேதிக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 330 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்து, பேசியது:
இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 180 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பின்னா், பல்வேறு துறைகள் சாா்பில் 330 பேருக்கு வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகள், மாதாந்திர ஓய்வூதிய தொகைக்கான ஆணை, விவசாயப் பயன்பாட்டுப் பொருள்கள், தொழில்முனைவோா்களுக்கு காசோலை, குழுக் கடன் உள்பட மொத்தம் ரூ. 51 லட்சத்து 11 ஆயிரத்து 407 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் (பொ) கோ. பழனிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வைஜெயந்திமாலா கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...