2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:48 pm

DIN

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்

டி.ஆா். லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா் கலந்து கொண்டு பேசும்போது, பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களில் கட்சி நிா்வாகிகளை நியமித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக போட்டியிட்டாலும், காங்கிரஸ் போட்டியிட்டாலும் ஒற்றுமையுடன் சோ்ந்து வெற்றிக்கு அயராது தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், வட்டாரத் தலைவா்கள், நகரத் தலைவா்கள், செயலாளா்கள் உட்பட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.