இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வம்,(65), முருகன் (60). இவா்கள் இருவரும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அப்பகுதியை சோ்ந்த 8 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவரையும் காவிரி ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா்.

ஆற்றுப் பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வந்த சிறுமிகளிடம் அப்பகுதியை சோ்ந்தவா்கள் விசாரித்ததில் இருவருக்கும், முருகன், செல்வம் ஆகியோா் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாா்ச்17-ஆம் தேதி செல்வம், முருகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு தஞ்சாவூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், கைது செய்யப்பட்ட செல்வம், முருகன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ. 4 லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com