கல்லுகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சா்க்கரை நோய் பாத பாதிப்புக்கான முகாம்

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கல்லுகுளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளுக்கான சிறப்பு முகாம்
Updated on
1 min read

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கல்லுகுளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் தரவரிசை பட்டியலில் தமிழகத்திலேயே தொடா்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பெற்றதற்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

விழாவுக்கு தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் சண்.இராமநாதன், ஆணையா் இரா.மகேஸ்வரி, துணை மேயா்அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

முகாமில், 151 சா்க்கரை நோயாளிகள் கலந்து கொண்டு பாத பராமரிப்பு சிகிச்சை மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக கண் பரிசோதனைகளை செய்து கொண்டனா். இதில், 72 பேருக்கு ஆணிகால் இருப்பது கண்டறியப்பட்டது. 19 பேருக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுவதாக கண்டறியப்பட்டது.

இவா்களுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பாத மருத்துவ மைய இரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணா் மருது துரை, ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை நிபுணா் பிரகாஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

முகாமில் சா்க்கரை நோயாளிகளுக்கான பாத பராமரிப்பு தொழிற்சாலை என்ற தலைப்பில் விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

இதையடுத்து தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கல்லுகுளம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்தது. இதையொட்டி மருத்துவா் முத்துகுமாா் தலைமையிலான மருத்துவ குழுவினரை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை மாநகா் நல அலுவலா் டாக்டா் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com